Ms.S.M.D.K.Jayasinghe

Provincial Director

Sri Lanka Accounting
Service - Class I
e_mail -
Office-(+94 37 2222746+94 37 2222746 )
Mobile-(+94 77 3875414+94 77 3875414 )




· தவறுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்காக நிறுவனத்தினுள் செயற்படுத்தப்படும் உள்ளக சோதனைகள் மற்றும் நிர்வாக முறைமையின் செயற்பாடுகள் உண்மையிலேயே வெற்றிகரமானதா என்பதனை கண்டறிதல்.

· கணக்கு மற்றும் ஏனைய அறிக்கைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் பயன்படுத்தப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் முறையினூடாக திருத்தமான நிதிக்கூற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதனை கண்டறிதல்.

· ஆளணியைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றும் போது அவர்களது செயலாற்றுகைத் தரத்தினை மதிப்பீடு செய்தல்.

· நிறுவனத்தின் சொத்துக்கள் அழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவது சம்பந்தமாக கண்டறிதல்.

· தாபன விதிக் கோவை, மாகாண சபை நிதிக் கட்டளைகள், ஆளுநர் ஏற்புடைத்தாக்கும் நடைமுறைகள், அரசாங்க நிர்வாக, திறைச்சேரி மற்றும் உபதேசங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை கண்டறிதல்.

· வீண்விரயம், சிக்கனமற்ற செலவுகள் என்பவற்றை தடுத்தலைப் போன்றே அவற்றைக் கண்டறிந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உள்ளக நிர்வாக முறைமையின் பயன்பாடு தன்மையை கண்டறிதல்.

· நிறுவனத்தின் கணக்கு நடைமுறை மற்றும் ஏதேனும் செலவீனத்திற்குக் காரணமாக இருக்கும் செயற்பாடுகளை பரிசோதித்தல் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பாதுகாப்பான வகையில் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தப்படுகின்றதா என்பதனைக் கண்டறிதல்.

· தேவையான சந்தர்ப்பங்களின்போது விசேட ஆய்வுகளை மேற்கொள்ளல்.

· பாராளுமன்ற அரச கணக்குக் குழு நடவடிக்கைகளின் போது மற்றும் மாகாண சபை நிதியத்தின் கணக்கு நடவடிக்கைகளின் போது பிரதம செயலாளரின் பிரதிநிதியாகக் செயலாற்றுதல்.

· கணக்காய்வாளர் நாயகத்தினால் மாகாண சபைகளின் பல்வேறு நிறுவனங்கள் சம்பந்தமாக வெளியிடப்படும் கணக்காய்வு சம்பந்தமான அலுவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்னேற்றத்தினை அறிவித்தல்.

· சகல நிதி ஆண்டுகளுக்காகவும் மாகாணம் சம்பந்தமாக உள்ளக கணக்காய்வு வேலைத் திட்டங்களை தயாரித்து பிரதம செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற்று கௌரவ ஆளுநருக்குப் பிரதியுடன் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் அந்த வேலைத் திட்டத்தின் பிரகாரம் வருடாந்த உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை வழிநடாத்தல்.

· உள்ளக கணக்காய்வின் மூலம் கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட காலாண்டறிக்கையை அடுத்துவரும் காலாண்டு முடிவடைவதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பிரதம செயலாளருக்கு பிரதியுடன் ஆளுநருக்கு சமர்ப்பித்தல்.

· மாகாண உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் மற்றும் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகளில் கடமைபுரியும் அலுவலர்களுக்குத் தேவையான அறிவு, புதிய தொழில்நுட்பம் மற்றும் உத்திகள் என்பவற்றை அறிமுகஞ் செய்யும் நோக்கில் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

· உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஏனைய அனைத்து மாகாண சபைகளுடனும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

· உள்ளக நிர்வாக பலவீனமான நிலையில் காணப்படும் நிறுவனங்களின் உள்ளக நிர்வாக அமைப்பைப் பலப்படுத்துவதற்காக கணக்கீட்டு உத்தியோகத்தர்களுக்கு, பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல். சிபாரிசு மற்றும் பிரேரணைகளை முன்வைத்தல்.