Ms.S.M.D.K.Jayasinghe

Provincial Director

Sri Lanka Accounting
Service - Class I
e_mail -
Office-(+94 37 2222746+94 37 2222746 )
Mobile-(+94 77 3875414+94 77 3875414 )




உள்ளகக் கணக்காய்வு

உள்ளகக் கணக்காய்வு என்பது, நிறுவனத்தினுள் மேற்கொள்ளப்படும் சுயாதீன மதிப்பீடாகும். மேலாண்மையின் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் அலுவல்கள் மற்றும் சேவைகள் சம்பந்தமாக மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல், அளவீடு செய்தல் மற்றும் உள்ளக பரிபாலண முறைமையின் பங்களிப்பு சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்தலும் இதனுள் அடங்கும்.” உள்ளகக் கணக்காய்வானது மேலாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம்.

மாகாண சபை நிதிப் பிரமாணக் கோவையின் 79.4 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் மாகாண கணக்காய்வுத் திணைக்களமொன்று இருத்தல் வேண்டும். அதன் தலைவர் உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் ஆவார். உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையொன்று இருப்பின் அதன் பிரகாரம் ஆளுநர் அதற்கான நியமனங்களை மேற்கொள்வார்.

உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளரின் விடயப்பரப்பு

· மாகாண சபைக்குரிய அமைச்சுக்கள், ஆளுநர் அலுவலகம், சபைச் செயலாளர் அலுவலகம், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள், உள்ளூராட்சி அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் உள்ளூராட்சி நிறுவனங்கள், நியதிச் சட்டங்களின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள சபைகள், அதிகார சபைகள், நிறுவனங்கள், நிதியங்கள், மாகாண சபை அலுவல்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பிரதேச செயலகங்கள் போன்ற மாகாண சபைக்குள் அடங்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அலுவல்கள் சம்பந்தமாக நிலவும் உள்ளக நிர்வாக முறைமையை ஆராய்ந்து அவற்றில் தவறுகள் மற்றும் ஊழல்கள் நிகழ்வதனைத் தடுப்பதற்கும், அவற்றை அறிந்துக்கொள்வதற்கும், பயன்படுத்தப்படும் உள்ளக சோதனையின் தன்மை மற்றும் அதன் அளவு சம்பந்தமாக தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சுயாதீனமான மதிப்பீடு மேற்கொள்ளல்.

· மாகாண சபையின் கீழ் இயங்கும் ஏதேனுமொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அல்லது நிறுவமொன்று ஏற்றுக்கொண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடல், செயற்படுத்தல் மற்றும் அவற்றை சிறப்பாக நிறைவு செய்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது முன்னேற்றத்தினை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக பிரதம செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக வெவ்வேறான உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகளை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், விசாலமான விடயப்பரப்புக்களைக் கொண்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரிவொன்று அமைக்கப்படல் வேண்டும். அந்தப் பிரிவுகளின் அலுவல்கள் சம்பந்தமாக உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் பிரதம செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்குரிய உள்ளகக் கணக்காய்வு வேலைத் திட்டத்தினை உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் தயாரிக்க வேண்டியிருப்பதுடன் சந்தர்ப்பத்திற்கேற்ப திருத்தங்களையும் மேற்கொள்ளல் வேண்டும்.